எதிர்பாராத திடீர் திருப்பம். இந்த வாரம் எவிக்ட் ஆனது இந்த போட்டியாளரா??

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இவர்களில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஏடிகே என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஏடிகே ஆவேசமாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பாக அசீமுக்கு சிம்மசொப்பனமாக அவர் இருந்து வந்த நிலையில் அவர் திடீரென வெளியேற்றப்படுவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா.. எந்த அரசு பெர்பெக்ட்? விஷாலின் ஆச்சரியமான பதில்!

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மூன்று மாநில அரசுகளில் எந்த அரசு சிறப்பாக செயல்படுகிறது என்ற கேள்விக்கு விஷால் அளித்துள்ள பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 6: இந்த வாரம் வெளியேற்றம் யாருக்கு வாய்ப்பு அதிகம்?

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பட்டியலில் குறைந்த வாக்குகள் பெற்ற ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார்

8 ஆண்டுகள் கழித்து அட்லி குடும்பத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.. வைரல் புகைப்படம்!

 அட்லீ மற்றும் ப்ரியா ஆகியோர் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது அட்லி மனைவி ப்ரியா கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது.

4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை.. அதிசயத்தை பார்க்க குவியும் கூட்டம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் நான்கு கால்களுடன் கூடிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளததை அடுத்து அந்த குழந்தையை காண்பதற்காக மருத்துவமனையை நோக்கி கூட்டம் குவிந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஷாலின் 'லத்தி' சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் இவ்வளவு தானா?

விஷால் நடித்த 'லத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.