close
Choose your channels

எதிர்பாராத திடீர் திருப்பம். இந்த வாரம் எவிக்ட் ஆனது இந்த போட்டியாளரா??

Friday, December 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் தமிழ் 6வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் .

இந்த நிலையில் இந்த வாரம் அசீம், விக்ரமன், ஜனனி, ஏடிகே, ரக்சிதா, மணிகண்டன் ஆகிய 6 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருந்த நிலையில் இவர்களில் மணிகண்டன் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாகவும் அதனால் அவர் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ஏடிகே என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஏடிகே ஆவேசமாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பாக அசீமுக்கு சிம்மசொப்பனமாக அவர் இருந்து வந்த நிலையில் அவர் திடீரென வெளியேற்றப்படுவது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.