close
Choose your channels

இந்த வார டபுள் எவிக்சன்.. வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் இவர்கள் தான்!

Friday, December 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் பெற்ற நாமினேஷன் பட்டியலில் உள்ள ஒருவர் வெளியேற்றப்படுகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விறுவிறுப்பை அதிகப்படுத்த இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட இருப்பதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். அதன்படி இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாக சற்றுமுன் செய்தி வெளியான நிலையில் அந்த போட்டியாளர்கள் யார் என்பதை தற்போது பார்ப்போம்.

இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றதால் அவர்கள் இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்.

அந்த வகையில் நாம் எதிர்பார்த்தபடியே ராம் மற்றும் ஆயிஷா இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.