பிடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க.. ரசிகையின் கேள்விக்கு மைனாவின் சர்ச்சை பதில்

நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என மைனா ரசிகை ஒருவரின் கேள்விக்கு பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றைய கமல்ஹாசன் எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களுக்கு கேள்வி கேட்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஒரு ரசிகை ரட்சிதா மற்றும் மைனா உங்கள் இருவருக்கும் பெய்டு ஹாலிடேஸ் எப்படி இருந்தது? என கேட்டார்.

தங்களை கிண்டல் செய்யும் கேள்வி என்பதைக் கூட புரிந்து கொள்ளாத மைனா இந்த கேள்விக்கு சிரித்தார். ஆனால் ரக்ஷிதா சீரியசாக இந்த கேள்வியை எடுத்துக் கொண்டு, ‘பெய்டு ஹாலிடேன்ஸ் என்று நான் நினைக்கவில்லை, என்னால் முடிந்தவரை நன்றாக தான் விளையாடி வருகிறேன். என்னுடைய விளையாட்டு சரியில்லை என்று நீங்கள் நினைத்தால் இன்னும் நன்றாக விளையாட முயற்சிக்கிறேன்’ என்று கூறினார்.

இதனை அடுத்து மைனா பதில் கூறியபோது, ‘என்னால் முடிந்த வரை நான் விளையாடிக் கொண்டிருக்கின்றேன், என்னுடைய விளையாட்டு பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் என்னை வெளியேற்றி விடலாம்’ என்று கூறினார். மைனாவின் இந்த பதில் நெட்டிசன்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக இந்த வாரம் மைனா நாமினேஷன் பட்டியலில் இருந்தால் வெளியேறவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

இந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டரின் சம்பள தொகை எவ்வளவு?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் அவர்களில் நேற்று வெளியேறிய ராபர்ட்

இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன்.. சிக்கியவர்கள் யார் யார்?

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் பட்டியல் நடைபெறும் என்பதும், இதில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை

யோகிபாபு ஹீரோவாக நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'மண்டேலா' என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றது

மூன்று மொழிகளில் தனுஷின் அடுத்த படம்? இயக்குனர் யார்  தெரியுமா?

தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அவர் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார்

'துணிவு' ரிலீசுக்கு முன்பே வியாபாரத்தை தொடங்கிய 'ஏகே 62'

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் விஜய்யின் 'வாரிசு'க்கு போட்டியாக வரும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது