close
Choose your channels

இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன்.. சிக்கியவர்கள் யார் யார்?

Monday, November 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் பட்டியல் நடைபெறும் என்பதும், இதில் சிக்கியவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே.

இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாசினி மற்றும் ராபர்ட் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வார நாமினேஷன் பிராசஸ் குறித்த வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடந்த நிலையில் கமல்ஹாசன் ஓப்பன் நாமினேஷன் குறித்து போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளை கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. மேலும் நாமினேஷன் செய்யப்படுபவர் முகத்தில் கிரீம் தடவ வேண்டும் என்ற நிபந்தனையுடன் நடக்கும் இந்த நாமினேஷனில் முதலில் குயின்ஸி மற்றும் ரக்சிதாவை விக்ரமன் நாமினேஷன் செய்கிறார்.

அதே போல் ரக்சிதாவை நாமினேஷன் செய்யும் மணிகண்டன் அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறுகிறார். குயின்ஸி மற்றும் கதிரவன் ஆகிய இருவரையும் தனலட்சுமி நாமினேஷன் செய்கிறார். கதிரவன் சரியாக பேசவில்லை என அமுதவாணன் அவரை நாமினேஷன் செய்கிறார்.

மைனாவை ஆயிஷாவும், ஜனனியை கதிரவனும் நாமினேஷன் செய்கிறார்கள். கடைசியாக அசீம் குயின்ஸியை நாமினேஷன் செய்து அதற்கான காரணத்தை கூறுகிறார். இதனை அடுத்து இந்த வார நாமினேஷனில் குயின்ஸி, ரக்சிதா, கதிரவன், மைனா, ஜனனி ஆகிய ஐந்து பெயர்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.