ஐஸ்வர்யாவுக்கு ஜால்ரா போடும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்

  • IndiaGlitz, [Friday,September 14 2018]

பிக்பாஸ் போட்டியாளரான ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் அதிகபட்ச சலுகைகளை வழங்குவதாக குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக எழுந்து வருகின்றது. ஐஸ்வர்யாவுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து கமல்ஹாசனே மறைமுகமாக ஒருசில முறை பேசிவிட்டார். இருப்பினும் பிக்பாஸ் தனது நிலையை மாற்றி கொள்ளவில்லை

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ்1 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பிக்பாஸ் பேச வைத்துள்ளதாக தெரிகிறது. வீட்டிற்கு நுழைந்தவுடன் ஐஸ்வர்யாவை ஆர்த்தி, 'பிக்பாஸ் வீட்டின் மருமகளே' என பாராட்டினார். மேலும் ஐஸ்வர்யா கோபமின்றி எப்படி வீட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

அதேபோல் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் அதிகபட்ச பொய் கூறி சென்றாயனை ஐஸ்வர்யா ஏமாற்றியதால் கமல்ஹாசனே கடுப்பானார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் அந்த டாஸ்க்கில் நன்றாக விளையாடியது ஐஸ்வர்யாதான் என்று காயத்ரி பேசினார். ஐஸ்வர்யா பொய் சொன்னபோதிலும் அதுவொரு யுக்திதான் என்றும், சொன்ன பொய்யை அவர் மறைக்காமல் ஒப்புக்கொண்டதால் அவர்தான் சிறப்பானவர் என்றும் கூறினார்.

ஐஸ்வர்யா மீது மக்கள் மனதில் பதிந்திருக்கும் நெகட்டிவ் எண்ணங்களை போக்க பிக்பாஸ் இந்த யுக்தியை கடைபிடித்திருப்பது போல் தெரிகிறது. மொத்தத்தில் இந்த வாரமும் ஐஸ்வர்யா வெளியேற வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.

More News

ஜெய்யின் 'ஜருகண்டி' இசைவெளியீடு, ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜருகண்டி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்

'2.0' படத்தில் எத்தனை ரஜினி? எத்தனை அக்சய்குமார்? ஊகிக்க முடியாத கணக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய '2.0' திரைப்படத்தின் 3D டீசர் இன்று காலை வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்

பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனின் போட்டியாளர்கள் ஏற்கனவே ஐந்து பேர் வந்திருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

கனிமொழியின் கல்விக்கட்டணத்திற்கு உதவிய கமல்ஹாசன்

உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் கூலி வேலைக்கு சென்ற மாணவி ஒருவரின் முழு கல்விச்செலவையும் பொறுப்பேற்றுள்ளார்.

சூரியின் சிக்ஸ்பேக் புகைப்படத்தை வெளியிட்ட சீமராஜா சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.