உதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்!

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இணைந்துள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு ஆரவ் இணைந்து உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. பிக்பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரவ் மட்டுமின்றி கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டாலும், இருவரும் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்களா அல்லது வேறு முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றார்களா? என்பது குறித்து இன்னும் படக்குழுவினர் தகவல்களை வெளியிடவில்லை

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை முடித்துவிட்டு அருண் காமராஜ் இயக்க விருப்பம் ’ஆர்டிகள் 15’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பாகுபலி 2' சாதனையை முறியடித்த தளபதி விஜய்யின் 'மாஸ்டர்'

பிரபாஸ் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி 2' படத்தின் மிகப்பெரிய சாதனையை தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

முதல்கட்ட படப்பிடிப்பே வெளிநாட்டில்.. தளபதி 65' படத்தின் சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே.

விஜய்சேதுபதிக்கு இயக்குனர் சீனுராமசாமி கொடுத்த புதிய பட்டம்!

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற திரைப்படத்தில் தான் முதல்முறையாக முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்தார் என்பது தெரிந்ததே. தேசிய விருது பெற்ற

பிரபாஸின் 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'சலார். பிரசாந்த் நீல் என்பவர் இயக்கி வரும்

சிம்பு, தனுஷ் பட நாயகி கர்ப்பம்: மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்!

சிம்பு நடித்த 'ஒஸ்தி' தனுஷ் நடித்த 'மயக்கமென்ன' உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத் என்பதும், இந்த இரண்டு படங்களும் கிட்டத்தட்ட ஒரு மாத இடைவெளியில் ரிலீஸானது