close
Choose your channels

உதயநிதியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர்!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் இணைந்துள்ளதாக வந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை அளித்துள்ளது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. ஒரு பக்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதற்கு ஆரவ் இணைந்து உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன. பிக்பாஸ் தமிழ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரவ் மட்டுமின்றி கலையரசனும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டாலும், இருவரும் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்களா அல்லது வேறு முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றார்களா? என்பது குறித்து இன்னும் படக்குழுவினர் தகவல்களை வெளியிடவில்லை

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தை முடித்துவிட்டு அருண் காமராஜ் இயக்க விருப்பம் ’ஆர்டிகள் 15’ என்ற திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment