இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்பு: பிக்பாஸ் தமிழ் நடிகை அறிவிப்பு!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான பிரபல நடிகை இரண்டாம் முறையாக தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ஷெரின் என்பதும், இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பு ஊசி செலுத்தி இருந்தும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இருப்பினும் விரைவில் குணமாகி விடுவேன் என்றும் ஷெரின் வீடியோ ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஷெரினுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறை தனக்கு காய்ச்சல் மற்றும் தொண்டை அலர்ஜி, தலைவலி உள்பட ஒரு சில உபாதைகள் ஏற்பட்டு இருப்பதாகவும் மருத்துவரின் அறிவுரைப்படி தனிமைப்படுத்தி கொண்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments