close
Choose your channels

வருணை பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன்: பிக்பாஸ் அக்சரா சபதம்!

Monday, March 28, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான அக்சரா தனது சக போட்டியாளரான வருணை பழிவாங்காமல் விடமாட்டேன் என கூறி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் அக்சரா என்பதும் அவர் 84 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பது தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் வீட்டில் வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் நட்புடன் பழகி வந்தார்கள் என்பதும் இருவரும் ஒரே நாளில் எவிக்சன் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் வருண் மற்றும் அக்சரா நட்புடன் பல இடங்களில் சுற்றி வரும் வீடியோக்கள் புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில் சற்று முன்னர் அக்சரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது ஹேர் கலரை வருண் மாற்றி விட்டதாகவும் அதனால் வருணை சும்மா விடமாட்டேன் என்றும் வருணை பழிக்குப் பழி வாங்கும் வீடியோ விரைவில் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் வருண், அக்சரா ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இந்த திரைப்படத்தை பிரபல நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment