close
Choose your channels

அறந்தாங்கி நிஷாவா இது? புகைப்படத்தை பார்த்து ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Thursday, April 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பட்டிமன்றங்கள், பேச்சு போட்டிகள் ஆகியவற்றில் கலந்து கொண்டு மக்கள் மனதில் பதிந்தவர் அறந்தாங்கி நிஷா. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான நிஷாவுக்கு ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது.

ஆனால் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் அவர் சேர்ந்த பிறகு ரசிகர்களின் அதிருப்தியை அவர் சம்பாதித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வரும் அறந்தாங்கி நிஷா தற்போது பிக்பாஸ் ஜோடி என்ற நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளார்.

மே மாதம் 2-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து அறந்தாங்கி நிஷாவா இது? எப்படி வெயிட் லாஸ் பண்ணினிங்க? எப்படி ஒல்லியாக மாறினீர்கள்? என்று கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அறந்தாங்கி நிஷாவின் இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos