அறுவை சிகிச்சைக்கு பின் வீல்சேரில் வீடு திரும்பிய அர்ச்சனா: ரசிகர்கள் வாழ்த்து!

பிக்பாஸ் போட்டியாளரும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டதாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பதும் விரைவில் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று கூறியிருந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அர்ச்சனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வீல்சேரில் வெளியே வந்து காரில் வீட்டுக்கு செல்லும் காட்சியும், வீட்டில் காரிலிருந்து இறங்கி வீல்சேரில் உட்கார்ந்து வீட்டிற்குள் செல்லும் காட்சியும் உள்ள வீடியோ அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அர்ச்சனாவை பலர் விமர்சனம் செய்துள்ளார்கள்.இருப்பினும் அவரது தற்போதைய நிலையை பார்த்து அவர் மீண்டும் பழையபடி மாற வேண்டும் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு ஏன் வரவில்லை; திமுக அரசுக்கு கமல் கேள்வி

திமுக அரசு ஆரம்பித்து 75 நாட்களாகியும் மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய திட்டமான இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் என்ற திட்டத்தை ஏன் செயல்படுத்தவில்லை என கமல்ஹாசன் அறிக்கை

விஜய் மேல்முறையீட்டு வழக்கில் முக்கிய உத்தரவு!

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சொத்துக் குவிப்பு வழக்கு.......! மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்....!

மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில், இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

ஆணுறுப்பை ரப்பர் பேண்டால் இறுக்கமாகக் கட்டிய நபர்… விபரீத முடிவால் நேர்ந்த துயரம்!

ஆணுறுப்பு மட்டுமல்ல, உடலில் உள்ள எந்தவொரு உறுப்பையும் இறுக்கமாக்கும்போது அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் இருக்காது.

டுவிட்டரில் ட்ரெண்டாகும் சூர்யா40....! ரசிகர்களுக்கு 6 மணிக்கு செம டீரீட்....!

நடிகர் சூர்யாவின் 40-ஆவது திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.