close
Choose your channels

ஒரு வழியாக காதலரை அறிவித்தார் பிக்பாஸ் ஆயிஷா.. திருமணம் எப்போது?

Wednesday, February 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷா கடந்த சில நாட்களாக காதலித்து வரும் நிலையில் அவர் தனது காதலரை முதல் முறையாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

பிக்பாஸ் ஆயிஷா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காதலை ப்ரபோஸ் செய்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து தான் கமிட்டட் என்பதை உறுதி செய்தார். அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னால் அவர் காதலரின் முகத்தை காட்டாமல் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். இதனையடுத்து அவர் காதலர் தினத்தில் தனது காதலரை அறிமுகம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் எதிர்பார்த்தது போலவே நேற்று காதலர் தினத்தில் காதலருடன் இருக்கும் இரண்டு அட்டகாசமான புகைப்படங்களை பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். பிக்பாஸ் ஆயிஷாவை காதலிப்பவர் யோகேஷ் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிஷா மற்றும் யோகேஷ் ஆகிய இருவரும் சந்தோஷமாக சிரித்தபடி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விரைவில் யோகேஷ் - ஆயிஷா திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.