பிக்பாஸ் வீட்டில் நடனத்தில் கலக்கிய ஜனனி.. வைரல் வீடியோ

பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி நடனத்தில் கலக்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தொலைக்காட்சி டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சி போலவே போட்டியாளர்கள் நடித்து காட்டி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

தொலைக்காட்சி டாஸ்க் போட்டியாளர்களுக்கும் சரி பார்வையாளர்களுக்கும் சரி போரடிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜனனியின் டான்ஸ் நிகழ்ச்சி அசத்தலாக இருந்ததாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த ’குரு’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு மிகவும் அழகாக ஜனனி நடனமாடினார். அவரது நடன திறமையை பார்த்து போட்டியாளர்கள் கைதட்டி அவருக்கு உற்சாகம் அளித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது .

ஏற்கனவே இலங்கை தமிழில் கொஞ்சி பேசும் ஜனனிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது அவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதையும் பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். கண்டிப்பாக ஜனனி வெளியே வந்தவுடன் அவருக்கு திரையுலக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கடலை போடுவதற்கு இத்தனை லட்சம் சம்பளம் சம்பளமா? அசல் கோலாருக்கு அடித்த அதிர்ஷடம்!

பிக்பாஸ் போட்டியாளராக சென்று பிரபலமாக வேண்டும் என்றும் அந்த பிரபலத்தை வைத்து சின்னத்திரை மற்றும் பெரிய திரைகளில் வாய்ப்புகள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பலர் போட்டியாளர்களாக பிக்பாஸ்

'தளபதி 67' படத்தில் நடிப்பதை மறைமுகமாக உறுதி செய்த பிரபல நடிகர்: இன்னும் எத்தனை பேர்?

தளபதி விஜய் நடித்திருக்கும் 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தளபதி 67' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய

விஷாலுக்கு நன்றி சொன்ன பிரதமர் மோடி.. கிண்டல் செய்த தமிழ் நடிகர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காசி சென்ற நடிகர் விஷால், பக்தர்களுக்காக அங்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

மம்தா பானர்ஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்: சந்திப்பு நடக்குமா?

 மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்னையில் கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொள்ள இருப்பதால் இருவரும் சந்திப்பார்களா?

'அவள் வைத்திருக்கும் ஆயுதமே வேறு': சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டிரைலர்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும்