close
Choose your channels

மம்தா பானர்ஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்: சந்திப்பு நடக்குமா?

Thursday, November 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சென்னையில் கலந்து கொள்ளவிருக்கும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொள்ள இருப்பதால் இருவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநில கவர்னர் இல கணேசன் அவர்களின் சகோதரர் 80வது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மேற்கு வங்கத்திலிருந்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சென்னை வந்தார் என்பதும் நேற்று அவர் மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் மேற்குவங்க ஆளுனர் இல கணேசனின் சகோதரர் 80வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்பட பலர் கலந்து கொள்ளவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்த் மற்றும் மம்தா பானர்ஜி சந்திப்பு நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.