close
Choose your channels

பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

Friday, February 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதும் வரும் ஞாயிறு அன்று அந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மற்றவர்களின் வீடுகளுக்கு சென்று தங்களுடைய நட்பை புதுப்பித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் கருத்துவேறுபாடுகளுடன் இருந்தாலும் வெளியே வந்தபின்னர் அனைவரும் நட்பாக இருப்பது பாசிட்டிவ்வாக கருதப்படுகிறது

அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் சமீபத்தில் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். சோம், ஜீவா, ரியோ, கேப்ரில்லா, அர்ச்சனா, அனிதா, ரேகா ஆகியோர் சுரேஷ் வீட்டிற்கு சென்று உள்ளனர். இது குறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள சுரேஷ் தனது வீட்டிற்கு வந்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்

இருப்பினும் இந்த புகைப்படத்தில் ஆரி, பாலா, ஷிவானி, சம்யுக்தா, வேல்முருகன், சனம்ஷெட்டி, ஆஜித், சுசித்ரா, ஆகியோர் மிஸ் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.