close
Choose your channels

அஜித்தின் 'துணிவு' படப்பிடிப்பில் பிக்பாஸ் ஜோடி: வைரல் புகைப்படங்கள்!

Saturday, October 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்துவரும் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஜீத்தின் ‘துணிவு’ திரைப்படத்தில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர்-பாவனிரெட்டி ஜோடி நடித்து வருவதாகவும், தாய்லாந்து படப்பிடிப்பில் அமீர்-பாவனி இணைந்து உள்ளனர் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அஜித்துடன் அமீர்-பாவனி ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானதையடுத்து இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்

மேலும் இன்னொரு புகைப்படத்தில் அஜித், அமீர், பாவனியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்னொரு போட்டியாளரான சிபி சக்கரவர்த்தியின் உள்ளார் என்பதால் அவரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது

எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துணிவு’ படத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment