close
Choose your channels

'குறுக்கு வழியில்' போகும் சினேகன் மற்றும் சாக்சி அகர்வால்

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளர் சினேகன் மற்றும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் சாக்சி அகர்வால் குறுக்கு வழியில் செல்ல இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் சினேகன் மற்றும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர் சாக்சி அகர்வால் உள்பட ஒருசிலர் நடிக்கும் திரைப்படத்திற்கு ‘குறுக்குவழி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை N.T.நந்தா என்பவர் இயக்கி வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் துர்வா, பிரனய், தீபன், ஷிரா, மிப்புஉள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.

ராய்ஸ் மேட் பிரைவேட் லிமிடட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. முதல்முறையாக சினேகன் மற்றும் சாக்சி அகர்வால் ஜோடி சேரும் இந்த படத்தை இயக்குவதோடு N.T.நந்தா ஒளிப்பதிவும் செய்கிறார் என்பதும் இந்த படம் ஆரோக்யராஜ் என்பவரின் கலை இயக்கத்தில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz