எவிக்சனில் இருந்து நித்யாவை காப்பாற்றிய பிக்பாஸ்

  • IndiaGlitz, [Monday,June 25 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் பாதி நாள் வெங்காய சண்டையில் கழிந்ததால் பார்வையாளர்கள் பொறுமை இழந்தனர். இதனால் நித்யா மீது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று போட்டியில் இருந்து வெளியேறும் நபர் யார் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் பெரும்பாலான போட்டியாளர்கள் நித்யாவை வெளியேற்றும்படி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே போட்டியாளர்கள் நித்யா, மும்தாஜ், அனந்து ஆகியோர்களின் பெயர்களை கூறினர்

ஆனால் திடீரென பிக்பாஸ் வீட்டின் தலைவியாக நித்யாவை நேரடியாக பிக்பாஸ் தேர்வு செய்துள்ளார். இதனால் நித்யாவை யாரும் எவிக்சன் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நித்யாவை எவிக்சன் செய்துவிட்டால் பிக்பாஸ் வீட்டில் உள்ள சண்டை முடிவுக்கு வந்துவிடும் என்பதால் நித்யாவை பிக்பாஸ் காப்பாற்றியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நித்யா தலைவியாகிவிட்டால் பாலாஜி நிலைமை என்ன ஆகும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. நித்யா தலைவியாக உள்ள இந்த வாரம் விறுவிறுப்பு அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

டிராபிக் ராமசாமி' படத்தின் ஓப்பனிங் வசூல் எப்படி?

சென்னையை சேர்ந்த சமூக போராளியான டிராபிக் ராமசாமி அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் 'டிராபிக் ராமசாமி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

'டிக் டிக் டிக்' படத்தின் அபார ஓப்பனிங் வசூல்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கிய 'டிக் டிக் டிக்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகளின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது

'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் வெளியாகும் 'விஸ்வரூபம் 2'

அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வரும் கமல்ஹாசன், தனது 'விஸ்வரூபம் 2' படத்தின் சிங்கிள் டிராக் ஒன்றை நிகழ்ச்சியின் இடையே அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வரும் கமல்ஹாசன்,

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அப்டேட்

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்து வரும் படங்களில் ஒன்று 'இமைக்கா நொடிகள்'. அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து தற்போது

இம்சை அரசனுக்கு வடிவேலு பச்சைக்கொடியா?

ஷங்கரின் 'எஸ்' பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி 2' படத்தின் படப்பிப்பு ஒருசில மாதங்களே நடந்த நிலையில் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் திடீரென நிறுத்தப்பட்டது