என்னுடைய திருமணம் நின்றதற்கு இதுதான் காரணம்: பிக்பாஸ் தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,July 03 2021]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான காஜல் பசுபதி, தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது தனது திருமணம் நின்றதற்கும் பாஜகதான் காரணம் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை காஜல் பசுபதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் டான்ஸ் மாஸ்டர் சாண்டியை திருமணம் செய்து அதன்பின் அவரை விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்றும், கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் யாரை திருமணம் செய்யப்போகிறார்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஆனால் இந்த திருமண டுவிட் வேடிக்கையாக போடப்பட்ட காப்பிபேஸ்ட் டுவிட் என்று அதன் பிறகு தெரிய வந்தது.

இந்த நிலையில் மீண்டும் தனது திருமணம் குறித்து கூறியுள்ள காஜல் பசுபதி ’தனது திருமணம் நின்றுவிட்டதற்கு காரணம் பாஜகதான் என்றும், கடைசி நேரத்தில் மாப்பிள்ளை ஒரு பாஜககாரர் என்று தெரிய வந்ததால் திருமணத்தை நிறுத்தி விட்டேன் என்றும் மீண்டும் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

More News

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து பூச்சி முருகனின் ஆவேச பதிவு!

மத்திய அரசு விரைவில் அமல்படுத்த திட்டமிட்டுள்ள ஒளிபரப்பு சட்ட திருத்த மசோதா திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, கார்த்திக் சுப்புராஜ்

சொகுசு விடுதியில் கைதுசெய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ… பரபரப்பு பின்னணி!

குஜராத் மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ கேசரிசின் சிங் சோலங்கி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்

திருமணத்திற்குப் பிறகு நடிகை பிரணிதா வெளியிட்ட க்யூட் வீடியோ… வைரல்!

தமிழில் நடிகர் அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “உதயன்” எனும் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். பின்பு நடிகர் கார்த்தியுடன் “சகுனி”,

சினிமா குரல் வளையை நெறிக்கும் புது சட்டம்… பதறும் சினிமா பிரபலங்கள்!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே இருக்கும் சினிமா ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) சில மாற்றங்களை கொண்டு வர நினைக்கிறது.

6வது திருமண நாளை கொண்டாடிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: அழகிய புகைப்படங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொலைக்காட்சி தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் 'பாண்டியன் ஸ்டோர்' தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே.