close
Choose your channels

பிக்பாஸ் கவின் நடித்த 'லிஃப்ட்' அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Friday, March 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் கவின் ஒப்பந்தமான திரைப்படம் ‘லிஃப்ட்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது

இந்த நிலையில் ‘லிஃப்ட்’ படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டன. அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டரை கவின் ரசிகர்கள் ரசித்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் மற்றும் ’பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வினீத் வரபிரசாத் இயக்கியுள்ளார். யுவா ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பிரிட்டோ இசை அமைப்பில் உருவாகிய இந்த படத்தை ஹெப்ஸி என்பவர் தயாரித்துள்ளார்.

இந்த படம் இந்த ஆண்டே வெளியாக உள்ளதாக மோஷன் போஸ்டர் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் கவினுக்கு இந்த திரைப்படம் திருப்பத்தை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment