சிவகார்த்திகேயன், அனிருத்துக்கு நன்றி சொன்ன கவின்: காரணம் இதுதான்!

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான கவின், தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் கவின் ஒப்பந்தமான திரைப்படம் ’லிப்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று ஏற்கனவே சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஹே ப்ரோ’ என்ற பாடல் ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாக உள்ளது.

இந்த பாடலை அனிருத் வெளியிட உள்ளார் என்பதும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாடலை பாடிக் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கும் ரிலீஸ் செய்ய ஒப்புக் கொண்ட அனிருத்துக்கும் தனது நன்றியை கவின் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

More News

'பாரீஸ் பாரீஸ்' ரிலீஸ் எப்போது? காஜல் அகர்வால் கூறிய பதில் இதுதான்!

பாலிவுட் திரையுலகில் கங்கனா ரனாவத் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'குயின்'. இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தமிழிலும் 'பாரிஸ் பாரிஸ்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஹவுஸ்புல் ஆன 'தர்பார்' திரைப்படம்: 'பாபா' முத்திரையை பதிவு செய்த தேசிங்கு பெரியசாமி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'தர்பார்' திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

அஜித் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன்: தமிழ் நடிகர் பேட்டி

அஜித் நடித்த 'தீனா' படத்தில் அவர் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன் என தமிழ் நடிகர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்

விஜய் - கார்த்தி சந்திப்பின்போது என்ன நடந்தது?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாகவும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு

தனுஷின் புதிய சாதனை: தமிழ் சினிமா ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளினார்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.