பிக்பாஸ் லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Monday,November 16 2020]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பதும், கிட்டத்தட்ட கடந்த சீசனில் இறுதி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியாக உள்ளது. கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின்னர் தான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை அன்புடன் கண்டித்த விதம் ஒவ்வொரு தகப்பனையும் மகிழ்வித்தது.

லாஸ்லியாவின் தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர். 

இந்த நிலையில் லாஸ்லியா தனது தந்தையார் இறந்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ் தொலைக்காட்சி நடிகர் வெட்டிக்கொலை: சென்னையில் பரபரப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜாக்குலின் நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் தேன்மொழி. இந்த தொடரில் துணை நடிகராக நடித்த நடிகர் ஒருவர்

இந்திய அளவில் சாதனை செய்த முதல் டீசர்: 'மாஸ்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும் இந்த டீசர் வெளியான அடுத்த வினாடியில்

தனுஷ் வெளியிட்ட செல்வராகவன் பட போஸ்டர்: இணையத்தில் வைரல்

தனுஷ் உள்பட பல நடிகர்களை சிறப்பாக நடிக்க வைத்து பிரபலமாக்கிய பெருமை இயக்குனர் செல்வராகவனுக்கு உண்டு என்பதும், அவருடைய படங்களில் நடிக்கும் ஹீரோக்கள்

நான் பாஜகவில் இணைகிறேனா? சந்தானம் அளித்த விளக்கம்!

கடந்த சில மாதங்களாக தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் அவர்கள் பதவி ஏற்ற பின்னர் குஷ்பு

சுவாரஸ்யமற்ற போட்டியாளர் : பாலாஜியை கட்டம் கட்டிய சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 41 நாட்களாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் இன்று 42வது நாளில் முதல் புரமோ வெளியாகியுள்ளது