close
Choose your channels

இந்திய அளவில் சாதனை செய்த முதல் டீசர்: 'மாஸ்டருக்கு குவியும் பாராட்டுக்கள்!

Sunday, November 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது என்பதும் இந்த டீசர் வெளியான அடுத்த வினாடியில் இருந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது என்பதும்
நேற்று மாலை முதல் தற்போது வரை இந்த டீசர் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த டீசர் இந்திய அளவில் சாதனை செய்துள்ளது என்பது தெரியவந்துள்ளது

’மாஸ்டர்’ டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் மற்றும் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை இந்த டீசர் அள்ளி உள்ளது என்பதும் இந்த அளவுக்கு அதிக பார்வைகளையும் லைக்ஸ்களையும் இந்திய அளவில் பெற்ற முதல் டீசர் இதுதான் என்ற பெருமையை ’மாஸ்டர்’ படத்தின் டீசருக்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாஸ்டர் டீசருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது

மேலும் இந்திய அளவில் அதிக லைக்ஸ்கள் பெற்ற ஐந்து 5 திரைப்படங்களின் டீசர்களில் 3 டீசர் விஜய் படம் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் மெர்சல் திரைப்படத்திற்கு 1.2 மில்லியன் லைக்ஸ்களும், சர்க்கார் படத்திற்கு 1.48 மில்லியன் லைக்ஸ்களும், தற்போது மாஸ்டர் படத்தின் டீசருக்கு 1.6 மில்லியன் லைக்ஸ்களும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.