close
Choose your channels

ரொமாண்டிக் வெப்தொடரில் பிக்பாஸ் மஹத்:  டைட்டில் அறிவிப்பு!

Tuesday, March 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் மஹத், ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு ரொமான்டிக் வெப்தொடரில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நேர்த்தியான கதைகள் மற்றும் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் கொண்ட படங்களில் நடித்து வரும் மஹத், அடுத்ததாக ஈமோஜி எனும் வெப்தொடரில் நடித்துள்ளார். திருமணமான தம்பதி தாங்கள் இருவரும் பிரிய நினைக்க, அவர்களை காதல் இணைத்ததா? என்பதாக, அவர்களை சுற்றிய உணர்வுபூர்பமான ஒரு காதல் கதையாக இத்தொடர் உருவாகியுள்ளது.

இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, நாகர்கோவில், ஹைதராபாத் மற்றும் கேரள வனப்பகுதிகளிலும் இந்த தொடர் படமாக்கப்பட்டுள்ளது. மஹத் ராகவேந்திரா கதாநாயகனாகவும், தேவிகா சதீஷ் கதாநாயகியாகவும் நடிக்க, இந்த தொடரில் மானசா மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், விஜே.ஆஷிக், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஈமோஜி தொடரை சென்.எஸ். ரங்கசாமி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஜலந்தர் வாசன், கலை இயக்குநராக வனராஜ், விக்ரம் இசையமைப்பாளராகவும், எம்.ஆர்.ரெஜீஷ் படத்தொகுப்பாளராகவும், சந்தியா சுப்பவரபு ஆடை வடிவமைப்பாளராகவும், N.சந்திரசேகர் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இருவர் ஒன்றானால் மற்றும் பொற்காலம் படங்களை தயாரித்த A.M. சம்பத் இந்த ’ஈமோஜி’ இணைய தொடரை தயாரித்துள்ளார். இவர் இதற்கு முன்பாக தீனா, ரமணா படங்களில் கிரியேட்டிவ் டைரக்டராகவும், அமீர்கான் நடித்த கஜினி படத்தில் எக்ஸிக்யூட்டிவ் புரடியூசராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.