close
Choose your channels

ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுகிறாரா மணிகண்டன்? பிக்பாஸ் குழுவினரின் திடீர் சோதனையால் பரபரப்பு

Wednesday, November 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டனுக்கு ரெட்கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் கடந்த சீசன்கள் போல் இந்த சீசனிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தி கவனத்தை செலுத்தி வருகின்றனர்.

இதுவரை நான்கு போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் வைல்ட் கார்டு போட்டியாளர் எண்ட்ரி ஆவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மணிகண்டன் தன்னுடைய ஷூவில் ப்ளுடூத் வசதி இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பிக்பாஸ் குழுவினர் திடீர் என வீட்டிற்குள் வந்து மணிகண்டனின் ஷூவை எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து மைனா, நிவாஸினியிடம் கூறியபோது மணிகண்டன் தன்னுடைய ஷூவில் புளூடூத் வசதி இருப்பதாக கூறியதை அடுத்து அவருடைய ஷூவை எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய சென்று இருக்கிறார்கள் என்றும் பரிசோதனை செய்துவிட்டு திருப்பி கொண்டு வருவார்கள் என்றும் அவர் கூறினார்.
 
பிக்பாஸ் வீட்டில் எந்த விதமான எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை என்ற நிபந்தனை இருக்கும் நிலையில் மணிகண்டன் விதிமுறைகளை மீறி ப்ளூடூத் பொருத்தப்பட்ட ஷூவை பயன்படுத்தியதால் அவரை ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
 

ஆனால் அதே நேரத்தில் ப்ளூடூத் ஷூ வசதி அவருடைய ஷூவில் இருக்கின்றதா? அப்படியே இருந்தாலும் அதனை அவர் முறைகேடாக பயன்படுத்தினாரா? என்பது குறித்து பிக்பாஸ் குழுவினர் ஆய்வு செய்து அதன் பின்னரே அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

Bigg Boss took away Manikanta's shoe after he revealed it has Bluetooth connectivity.

#BiggBossTamil6 pic.twitter.com/WJNlSpedTl

— Bigg Boss Videos & Updates (@BBFollower7) November 15, 2022

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.