close
Choose your channels

வீட்ல ஃபேன் கூட இல்லை.. ஆனால் நியூயார்க் தெருக்களில் காற்று வாங்கும் மாயா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

Monday, June 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மாயா, நியூயார்க் தெருக்களில் நடந்து செல்லும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட் பதிவாகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராக மாயா கலந்து கொண்டார் என்பதும் இவர் பூர்ணிமாவுடன் சேர்ந்து கொண்டு ஒரு கேங்காக பிரதீப் ஆண்டனியை வெளியேற்றியதோடு அர்ச்சனாவையும் வெளியேற்ற மிகவும் முயற்சி செய்தும் இந்த கூட்டணியால் முடியவில்லை என்பது மட்டுமின்றி அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் மாயா என்ற பெயரை பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் காரணமாக அவர் பிரபலம் அடைந்தாலும் பெரும்பாலும் அவருக்கு நெகட்டிவ் இமேஜ் தான் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூயார்க் தெருக்களில் ஹாயாக நடந்து காற்று வாங்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தனது வீட்டில் ஃபேன் கூட இல்லை என்று சொன்ன மாயா இன்று நியூயார்க் தெருக்களில் காற்று வாங்குகிறார் என்றும் கையில் மூன்று நான்கு படங்கள் வைத்துள்ளார் என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. இருப்பினும் மாயாவுக்கு ஆதரவாகவும் பல ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment