அமீர், பாவனி, சிபியை அடுத்து மேலும் ஒரு பிக்பாஸ் சீசன் 6 பிரபலம்: 'துணிவு' லேட்டஸ்ட் அப்டேட்!

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பாடல் வரிகள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர், பாவனி, சிபி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து ‘துணிவு’ படத்தில் ஒரு கேரக்டரில் நடித்திருப்பதாகவும், அதுமட்டுமின்றி பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், டான்சர் ரமேஷ் மற்றும் சில யூடியூப் பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் எச். வினோத் தெரிவித்துள்ளார்.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அஜித்தின் மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

முதல் ஷோ டிக்கெட்டே 1000 ரூபாய் தான்.. 'வாரிசு' ஆடியோ லாஞ்ச் டிக்கெட் இத்தனை ஆயிரமா?

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கும் நிலையில் இந்த விழாவில் பங்கேற்க வழங்கப்படும் பாஸ் ஐயாயிரம் முதல் பத்தாயிரம் வரை விற்பனையாகி வருவதாக

திருமணத்திற்கு பின் பழங்குடியின பெண்ணாக மாறிய ஹன்சிகா.. வைரல் புகைப்படம்!

சமீபத்தில் நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடந்த நிலையில் அவர் திருமணத்திற்குப் பின் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் படமொன்றின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி உள்ளது.

விஜய்யின் 'வாரிசு' படத்துடன் கனெக்ட் ஆன தனுஷின் 'வாத்தி' : அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'வாத்தி'  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி

'வணங்கான்' படத்தை அடுத்து 'வாடிவாசல்' படத்தில் இருந்தும் விலகுகிறாரா சூர்யா?

சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த 'வணங்கான்' என்ற திரைப்படத்தில் இருந்து சூர்யா திடீரென விலகினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தில்  அதர்வா

ரஜினி படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கின்றாரா யுவன்ஷங்கர் ராஜா?

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன