close
Choose your channels

'தளபதி 67' படத்தில் பிக்பாஸ் சீசன் 6 செல்லக்குட்டி? ஆச்சரிய தகவல்!

Tuesday, January 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதியின் விஜய்யின் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 67’. இந்த படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தினந்தோறும் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின் படி ’தளபதி 67 திரைப்படத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் செல்ல குழந்தையாக போற்றப்பட்ட ஜனனி கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது விஜய் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

’தளபதி 67’ படத்தில் நடிப்பதற்காக ஜனனி ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாகவும் அவர் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஜனனியிடம் கேட்டபோது ’இந்த தகவலை நான் சொல்வதை விட படக்குழுவினர் அதிகாரபூர்வமாக சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியதை அடுத்து அவர் இந்த படத்தில் இணைந்து உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக ’தளபதி 67’ படத்தின் படபிடிப்பு சென்னையில் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக காஷ்மீரில் அதிரடி ஸ்டண்ட் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதற்காக படக்குழுவினர் விரைவில் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos