close
Choose your channels

சமீபத்தில் வெற்றிப்படம் கொடுத்த நாயகனின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி!

Tuesday, September 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் வெற்றிப்படம் கொடுத்த நடிகரின் அடுத்த திரைப்படத்தில் பிக்பாஸ் நாராயணன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளன

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜிவி 2’ என்ற திரைப் படத்தில் நடித்திருந்த நடிகர் வெற்றி நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஜெகதீசன் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பக்ரீத், இரவு ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெற்றி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் நாயகியாகவும் மேலும் முக்கிய கேரக்டர்களில் மன்சூரலிகான், சந்தானபாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

இந்த படத்தில் வெற்றி ஒரு வீடியோ கேம் டிசைனராக நடிக்க இருப்பதாகவும் அவர் கற்பனை மூலம் உருவாக்கிய கேரக்டர் நிஜமாகவே பேயாக தோன்றியதால் ஏற்படும் திகில் அனுபவம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது

ஒரே இரவில் நடைபெறும் வகையிலான கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் சாலையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்திற்கு இசையமைத்த அரோல் கரோலி இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment