close
Choose your channels

பிக்பாஸ் அதிரடி அறிவிப்பு: திடீரென கூட்டாளிகளை தேர்வு செய்யும் போட்டியாளர்கள்:

Wednesday, October 14, 2020 • தமிழ் Comments

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே ’எவிக்சன் பாஸ்’ என்ற ஒரு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டு அது நேற்று ஆஜித்துக்கு கிடைத்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது நாமினேஷனில் இருந்து தப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பை பிக்பாஸ் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்

அதன்படி பிக்பாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இது உங்களுடைய தினசரி டாஸ்க். இந்த டாஸ்க் உங்களை அடுத்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றும் சக்தி வாய்ந்தது. இதற்காக நீங்கள் ஒரு கூட்டாளியை தேர்வு செய்யவேண்டும். ஒவ்வொருவரும் பந்தை பவுலில் போட்டு விட்டால் அவர் ஒரு போட்டியாளரை சரியான காரணத்தை கூறி டாஸ்க் போட்டியில் இருந்து வெளியேற்றலாம். கடைசியில் வெற்றி பெறுபவரும் அவருடன் கூட்டு வைத்தவரும் அடுத்த வாரம் நடக்கப்போகும் எவிக்சனில் நாமினேட் செய்யப்பட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்

இதனை அடுத்து ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய கூட்டாளியை தேர்வு செய்ய முயற்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். சுரேஷ்-பாலாஜி முருகதாஸ், நிஷா-ரியோ, ஆஜித்-ரம்யா, ஆரி-ஷிவானி, கேப்ரில்லா-அனிதா ஆகியோர் கூட்டாக இணைந்திருப்பதாக தெரிகிறது. இந்த டாஸ்க் விறுவிறுப்பாக இருக்குமா? என இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்

Get Breaking News Alerts From IndiaGlitz