பிக்பாஸ் ரம்யா ஆர்மிக்கு இன்ப அதிர்ச்சி: வெளியானது அதிரடி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 15 2020]

பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியன் முதல் நாள் முதலே சிரித்த முகத்துடன் உள்ளார். யாருடனும் வம்புக்கும் போகாமல் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் சண்டையை முடிந்தவரை தீர்த்து வைக்க பார்க்கிறார். குறிப்பாக ’எவிக்சன் பாஸ்’ டாஸ்க்கின்போது சுரேஷ் சக்கரவர்த்தியை புத்திசாலித்தனமாக வெளியேற்றியதும் அதன்பின்னர் அந்த பாஸ் தனக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தும் அதை ஆஜித்துக்கு விட்டு கொடுத்ததும் அவர்மேல் இருந்த மதிப்பு பல மடங்காக உயர்ந்துள்ளது.

எனவே இப்போதைக்கு ரம்யா பாண்டியன் போட்டியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்பதும் அனேகமாக அவர் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் சக்கரவர்த்தியே கடுமையான போட்டியாளர் என்று மனதார பாராட்டியது ரம்யாவை மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் உள்ளே படு புத்திசாலித்தனமாக ரம்யா விளையாடி வரும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே அவரது படம் ரிலீஸ் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது அவரது ஆர்மியினர்களுக்கு இரட்டை சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ரம்யா ஏற்கனவே ‘முகிலன்’ என்ற வெப் தொடரில் நடித்து கொண்டிருந்த நிலையில் அந்த தொடர் அக்டோபர் 30-ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் ’செம்பருத்தி’ சீரியல் கதாநாயகன் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார் என்பதும் நாயகியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார் என்பதும் ஸ்ரீ ராம்ராம் என்பவர் இந்த வெப்தொடரை இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த வெப்தொடர் ரம்யா பாண்டியனுக்கு திரையுலக வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

சொந்தமா ஒரு கார்கூட வச்சிக்கல… பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு… வைரலாகும் தகவல்!!!

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது அமைச்சரவை சாகக்களுடன் சேர்ந்து தனது சொத்துகள், முதலீடுகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தானாக முன்வந்து அறிவித்து

வெறித்தனமான கட்டிப்பிடி: சனம்ஷெட்டியிடம் எல்லை மீறினாரா வேல்முருகன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த ஒரு டாஸ்க்கில் சனம் ஷெட்டி மற்றும் வேல்முருகன் கூட்டணி வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் உள்ள இருவரையும் வரும் வாரம் யாரும் நாமினேஷன் செய்யக்கூடாது

'நமத்து போன பட்டாசு': அவார்டு கொடுத்து தூண்டிவிட்ட அர்ச்சனா: 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று புதுவரவாக உள்ளே வந்துள்ள அரச்சனா முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் கலக்கிவிட்டார். குறிப்பாக அனைவருக்கும் சவாலாக இருந்த போட்டியாளரான சுரேஷ் சக்கரவர்த்தியை அவர் முதல் நாளே

பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை!!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள்… தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும் தமிழக முதல்வர்!!!

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தை குறைந்த நாட்களிலேயே சரிசெய்வதற்குத் தமிழக முதல்வரின் நடவடிக்கைகளே காரணம் எனப் புகழப்படுகிறது.