ஷெரினை அடுத்து 2வது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Tuesday,January 11 2022]

நடிகையும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ஷெரின் சமீபத்தில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்பதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் ஷெரினை அடுத்து மேலும் ஒரு பிக்பாஸ் தமிழ் நடிகை இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரெய்சா வில்சன் என்பதும் இவர் அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ரெய்சா வில்சன், தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருந்தும் தனக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த முறை கடுமையான தலைவலி, உடல்வலி, ஜலதோஷம், தொண்டையில் பிரச்சனை, காய்ச்சல் உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த வைரஸ் உடன் போராட வேண்டும் என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகை ரெய்சா வில்சன், ‘பியார் பிரேமா காதல்’ ‘தனுசு ராசி நேயர்களே’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும், தற்போது ’எப்ஐஆர்’ ’காதலிக்க யாருமில்லை’ உள்பட 6 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பிகில்' நடிகைக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை: பாலியல் வழக்கு குறித்து நடிகையின் பதிவு!

நடிகை பாவனா மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் 'இந்த யுத்தத்தில் நான் தனியாள் இல்லை' என நடிகை பாவனா

2022 கோல்டன் குளோப்ஸ் விருது பெற்ற பிரபலங்கள்!

ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக உலக அளவில் மதிக்கப்படும் விருதுகளுள்

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுமா? புது தகவல்!

தமிழகத்தில் கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல்

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுமா? முழுமையான தகவல்!

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு