close
Choose your channels

'பிகில்' நடிகைக்கு திருமணம்: மாப்பிள்ளை யார் தெரியுமா?

Tuesday, January 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’பிகில்’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆனதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று ’பிகில்’ என்பதும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ரெபா மோனிகா ஜான் தனது நீண்டநாள் காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வருடங்களாக நடிகை ரெபா மோனிகா மற்றும் ஜோன் ஜோசப் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு தரப்பின் பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் கடந்த ஞாயிறு அன்று சர்ச்சில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இரு தரப்பின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரெபா மோனிகாவின் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பிகில், தனுசு ராசி நேயர்களே உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரெபா மோனிகா தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் ’எப்ஐஆர்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.