close
Choose your channels

விஜய்யின் 'வாரிசு' படத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்த பிக்பாஸ் தமிழ் பிரபலம்: வீடியோ வைரல்!

Tuesday, August 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர் இணைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும் தில் ராஜூ தயாரித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமன் இணைந்து உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘வாரிசு’ படத்திற்காக மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டு இந்த படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிப்பது த்ரில் அனுபவமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் அந்த படப்பிடிப்பில் கணேஷ் வெங்கட்ராமன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு இந்த படத்தில் என்ன கேரக்டர் என்பது போகப் போக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment