மீண்டும் பிக்பாஸ் இணைந்தார் சேரன்! கவினுக்கு நெருக்கடியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன், சீக்ரெட் அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவரை போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை சீக்ரெட் அறைக்கு சென்ற சேரன் , திங்கள், செவ்வாய் என இரண்டு நாட்கள் மட்டுமே சீக்ரெட் அறையில் இருந்த நிலையில் இன்று அவர் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் திரும்புவதாக முதல் புரோமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. சேரனின் வருகையை ஏற்கனவே வனிதா உள்பட பிக்பாஸ் போட்டியாளர்கள் எதிர்பார்த்தனர் என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிய வந்தது.

கவின் லாஸ்லியா மற்றும் வனிதா ஆகிய மூவருக்கும் மூன்று கேள்விகள் சேரன் கேட்ட நிலையில் கவின் - லாஸ்லியா கேள்வியால் வனிதாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கவின், லாஸ்லியா சம்பவம் இன்னும் ஒளிபரப்பாகி இருக்காது, அதற்குள் சேரன் இது குறித்த கேள்வியை கேட்டுள்ளார் என்றால் அவர் சீக்ரெட் அறையில் தான் இருக்க வேண்டும் என்பதை வனிதா சரியாக யூகித்தார். அவரது கணிப்புப்படியே சேரன் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார்

சேரனின் வருகை வனிதா, ஷெரின் உள்பட அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கவினுக்கு நெருக்கடியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

'சங்கத்தமிழன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்துடன் விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்', கார்த்தியின் 'கைதி' உட்பட ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக முதலில் செய்திகள் வெளிவந்தன.

விக்ரம்-அஜய்ஞானமுத்து படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

சீயான் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக்காட்சியில் அஜித்தின் விஸ்வாசம்!

ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான விழா கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றே. அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 9 முதல் 11 வரை இந்த விழா கொண்டாடப்பட்டு வருகின்றது

விஷாலின் 'துப்பறிவாளன் 2' திரைப்படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'துப்பறிவாளன்' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த இந்தப் படம் வசூல்

இலங்கையில் முதல்முறையாக 'பிகில்' திரைப்படம் செய்யும் சாதனை!

விஜய், அஜித் போன்ற மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் முண்டியடித்து செல்வர் என்பது தெரிந்ததே.