முதல்முறையாக ஓப்பன் நாமினேஷன்: முகத்திரைகள் கிழியுமா?

பிக்பாஸ் இல்லத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் நபரை நாமினேஷன் செய்யும் படலம் நடைபெற்று வருகிறது. இந்த நாமினேஷன் படலம் இதுவரை கன்ஃபக்சன் அறையில் ஒவ்வொருவராக வந்து தனித்தனியாக ரகசியமாக தெரிவித்து விட்டு போவார்கள். இதனால் யார் யாரை நாமினேஷன் செய்தார்கள் என்று தெரியாத நிலையில் முதல் முறையாக இன்று பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் நாமினேஷன் படலம் நடைபெறுகிறது

இதனால் யார் யாரை நாமினேஷன் செய்வார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்து விடும். இதனையடுத்து போட்டியாளர்களின் உண்மையான முகத்திரை கிழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நபராக லாஸ்லியா இருவரை நாமினேட் செய்ய வருகிறார். அவர் நாமினேட் செய்யும் முதல் நபர் மதுமிதா. சாண்டியுடன் ஏற்பட்ட பிரச்சினை முடிந்து அவர் மன்னிப்பு கேட்ட பின்னரும் கமலஹாசன் முன்னிலையில் நேற்று இந்த பிரச்சனையை அவர் கொண்டு வந்தது தனக்கு பிடிக்கவில்லை என்பதால் நாமினேஷன் செய்ததாக லாஸ்லியா கூறுகிறார்.

அடுத்ததாக அவர் சாக்சியை நாமினேஷன் செய்வதாக தெரிகிறது. மற்றவர்கள் யார் யாரை நாமினேஷன் செய்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

முதல்முறையாக தற்காப்புக்கலை படத்தில் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கும் திரைப்படத்தின் டைட்டில் நேற்று 'பட்டாஸ்' என்று அறிவிக்கப்பட்டது தெரிந்ததே.

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பது உண்மையா?

பிரபல இயக்குனர் எம் ராஜேஷ் சமீபத்தில் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வெளியான நிலையில், அவர் தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருகிறார்.

கேஎஸ் ரவிகுமாரின் அடுத்த படத்தில் பிக்பாஸ் புகழ் நடிகை

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளார் என்பது தெரிந்ததே

ரிலீஸ் ஆன விஜய் தேவரகொண்டா படத்தில் திடீர் மாற்றம்

விஜய் தேவரகொண்டா, மந்தனா ராஷ்மிகா நடிப்பில் உருவான 'டியர் காமிரேட்' என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.

அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையான வேகம் காட்டும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய் ஆகியோர்கள் நடிக்கும் திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்தால் அடுத்த ஒரு சில நிமிடங்களில் அவரது ரசிகர்கள் அந்த லுக்கின் போஸ்டர்களை