4 பேர லவ் பண்றது காமெடியா? கவினை கலாய்த்த கஸ்தூரி

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த முக்கோணக் காதல் மற்றும் சோக காதல் ஆகியவற்றால் பார்வையாளர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென கஸ்தூரியின் வரவு சுறுசுறுப்பாக்கி உள்ளது. நேற்றைய முதல் நாளில் கஸ்தூரி போட்டியாளர்களை கலக்கினார். மேலும் அடுத்த வார தலைவரை தேர்வு செய்யும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டது. இதனால் அவருக்கு அந்த வீட்டில் அதிக முக்கியத்துவம் கிடைத்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் அடுத்ததாக ஒவ்வொருவரையும் குறிவைத்து அவர் கேள்விகள் கேட்கும் படலம் தொடங்கியது. கஸ்தூரியிடம் முதலில் சிக்கியவர் கவின். ஒரே நேரத்தில் நான்கு பெண்களை லவ் பண்றது உங்களுக்கு காமெடியா? என கேள்வி எழுப்பிய கஸ்தூரி, உங்களுடைய எதிர்பார்ப்பு ஜேம்ஸ்பாண்ட் லெவலுக்கு இருந்தாலும் கடைசியில் அது வடிவேலு காமெடி போல் முடிந்தது என்று கூற கவினின் முகம் மாறுகிறது. மேலும் இதுவே ஒரு பெண், நான்கு ஆண்களிடம் ஜொள்ளுவிட்டிருந்தால் அதற்கு என்ன பெயர் வைத்திருப்பீர்கள்? என்று கஸ்தூரி கேட்க அதற்கு கவினால் பதில் சொல்ல முடியவில்லை.

கஸ்தூரியின் குற்றச்சாட்டுக்கு கவினுக்கு ஆதரவாக சேரன் பேசினாலும் கஸ்தூரி அதனை கண்டுகொள்ளவில்லை. கவினும் தன்னால் முடிந்தவரை கஸ்தூரியிடம் சமாளித்து பார்த்தும் முடியவில்லை. கவினின் பெயர் ஏற்கனவே பார்வையாளர்கள் மத்தியில் டேமேஜ் ஆகியுள்ள நிலையில் கஸ்தூரியின் அடுக்கடுக்கான கேள்விகள் கவினின் இமேஜை தவிடுபொடி ஆக்கிவருகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
 

More News

தனுஷின் 'அசுரன்' ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' மற்றும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் 'அசுரன்'

மீண்டும் பணமதிப்பிழப்பா? ஏடிஎம் நோக்கி குவியும் பொதுமக்கள்

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, திடீரென 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க

கஸ்தூரிக்கு ஸ்பெஷல் பவர்: ஜெயில் தண்டனைக்கு பதில் கஸ்தூரி தண்டனையா?

பிக்பாஸ் வீட்டில் இன்று கஸ்தூரி புதிதாக நுழைந்த நிலையில் அவர் சிறப்பு விருந்தினரா? அல்லது புதிய போட்டியாளராக? என்ற குழப்பம் இருந்து வந்தது.

'மாநாடு' டிராப் குறித்து வெங்கட்பிரபுவின் எமோஷனல் கருத்து!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகவிருந்த 'மாநாடு' திரைப்படம் கைவிடப்பட்டதாகவும் அதே நேரத்தில் சிம்புவுக்கு

மீரா விவகாரம்: சேரனை கேலி செய்யும் கஸ்தூரி!

பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது மீராமீதுன் சுமத்திய குற்றச்சாட்டால் சேரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ந்தது. சேரன் மீது அனைவருக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருந்து