தடுக்கி விழுந்த கவின், மயங்கி விழுந்த சேரன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் ஐந்து குழுக்களாக பிரிந்து ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் - சேரன், சாண்டி-தர்ஷன், முகின் - ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்படுகிறது

இந்த டாஸ்க்கை அனைவரும் விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் விளையாடி வரும் நிலையியில் கவின் திடீரென தடுக்கி விழுகிறார். சேரன் ஓடிய களைப்பில் மயங்கி விழுகிறார். இருவருக்கும் காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை என்றாலும் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் பதட்டம் அடைகின்றனர்.

நேற்று சேரன் திடீரென வெளியேற்றப்பட்டதால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் கவலையுடன் இருந்தனர். ஆனால் அந்த கவலையின் சுவடு கூட இன்று தெரியவில்லை என்பதும் இன்றைய டாஸ்க்கை அனைவரும் ஜாலியாக அனுபவித்து விளையாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சரவணனுடன் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்னும் 55 நாட்கள் மீதமிருப்பதால் வைல்ட் கார்ட் எண்ட்ரி இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனாவின் இரங்கல் செய்தி!

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி  பார்த்தசாரதி அவர்கள் இன்று தனது 93வது வயதில் காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

காஷ்மீர் பிரச்சனையில் மோதிக்கொண்ட இந்திய பாகிஸ்தான் வீரர்கள்

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டு அம்மாநிலம் இரண்டாகப் பிரிக்கப் பட்ட விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

காஷ்மீர் பிரச்சனை: அமலாபாலுக்கு பதிலடி கொடுத்த சித்தார்த்

காஷ்மீர் மாநிலத்தில் 370ஆவது சிறப்பு அந்தஸ்தை நேற்று மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது.

அஜித்தின் 'நேர் கொண்ட பார்வை குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

தமிழ் சினிமா உலகினர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருவது திருட்டு டிவிடி மற்றும் சட்டவிரோதமாக ஆன்லைனில் படம் வெளியிடுவது

ஒய்.ஜி.மகேந்திரன் தாயார் காலமானார்

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93