சாக்சி கொடுத்த பச்சோந்தி விருது! தூக்கி எறிந்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதமும், போட்டியும் எழுந்துள்ளது. தனிப்பட்ட முறையிலான தாக்குதல், மறைமுக தாக்குதல், உணர்ச்சிவசப்பட வைத்தல், கோபப்பட வைத்தல் ஆகிய தந்திரங்கள் போட்டியாளர்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒருமணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் 55 நிமிடங்கள் வனிதா மட்டுமே பேசுவதால் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எரிச்சல் அடைந்து அவர் எப்போது வெளியே செல்வார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் சாக்சி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கின்றனர். முதல்கட்டமாக பச்சோந்தி விருது அளிக்கப்படுகிறது. பச்சோந்தியை போல் போலியானவர் என்பதால் லாஸ்லியாவுக்கு அந்த விருது வழங்கப்படுவதாக மோகன் வைத்யா அறிவிக்க சாக்சி அந்த விருதினை லாஸ்லியாவுக்கு கொடுக்கின்றார்.

சாக்சியிடம் இருந்து பச்சோந்தி விருதை பெற்ற லாஸ்லியா, ‘இந்த விருது தனக்கு வேண்டாம்’ என்று தூக்கி எறிகிறார். ’உனக்கு இந்த விருது வேண்டாம் என்றால் வெளியே போய் தூக்கி போடு, இங்கே போடக்கூடாது’ என்று மோகன் வைத்யா கூற, ஒரு ஜட்ஜூக்கு மதிப்பில்லை என்றால் நான் யாருக்கும் விருது கொடுக்க மாட்டேன் என்று கோபமாக கிளம்புகிறார் சாக்சி. மொத்தத்தில் இன்றைய டார்கெட் லாஸ்லியா என தெரிகிறது.
 

More News

ஆசிரியர் தினத்தில் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்டுள்ள குசும்பு வீடியோ!

இந்தியா முழுவதும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் மகனும் நடிகருமான சாந்தனு

கமல்ஹாசனுக்காக இதை கர்வமாக, கடமையாக செய்கிறேன்: சூர்யா

உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மலேசிய அமைச்சருக்கு ஜோதிகா எழுதிய நன்றிக் கடிதம்! 

ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படத்தை பார்த்து மலேசிய அமைச்சர் மாஸ்லே பின் மாலிக் என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாராட்டு தெரிவித்தார் என்பது தெரிந்ததே.

சந்தானம் நடிக்கும் மூன்று வேட படத்தின் டைட்டில் அறிவிப்பு

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறுவது யார்? 

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கவின், முகின், லாஸ்லியா, ஷெரின் மற்றும் சேரன் ஆகிய 5 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். எனவே எவிக்சன் பட்டியலில் உள்ள