கமல் கூறிய வாழைப்பழக்கதை: கடுப்பில் சாக்சி

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஓரளவு பரபரப்பாக இருந்தது என்றால் அதற்கு கவினின் முக்கோண காதல் கதை தான் காரணம். சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் மாறி மாறி காதல் செய்து கொண்டிருந்த கவின், ஒரு கட்டத்தில் ஒரே ஒரு சாக்லேட்டினால் இருவரின் மனக்குறைக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் திணறினார் கவின். ஒரு வழியாக நேற்று இருவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் அமைதி திரும்பியுள்ள நிலையில் இன்று மீண்டும் அந்த பிரச்சனையை கமல் கிளப்புகிறார். செந்தில் ஒரு படத்தில் இரண்டு வாழைப்பழங்கள் வாங்கி, ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு இன்னொரு வாழைப்பழத்தை பார்த்து அதுதான் அந்த வாழைப்பழம் என்று கூறுவார். ஆனால் நீங்கள் நிஜமாகவே இரண்டு வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்க, அப்போது கமல்ஹாசனை சாக்சி முறைத்துப் பார்க்கின்றார். அதனை புரிந்து கொண்ட கமல்ஹாசன், சாக்சி தன்னை ஒரு மாதிரி பார்ப்பதாகவும், முக்கோணல் காதல் கதை அவருக்கு பிடிக்கவில்லையோ? என்றும் கூறுகிறார்

அப்போது கவின் 'சார் நான் கஷ்டப்பட்டு இரண்டு பேரையும் சமாதானப்படுத்தி இருக்கின்றேன். இத்தோட இந்த பிரச்சனையை விட்டுவிடலாம் என்று கெஞ்ச், கமலஹாசனும் பார்வையாளர்களும் சிரிப்பதோடு இன்றைய கடைசி புரமோ முடிவடைந்துள்ளது
 

More News

இதுதான் முதல் முறை: 'காப்பான்' படம் குறித்து கபிலன் வைரமுத்துவின் டுவீட்

சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது.

நடிகர் கார்த்தி மனம் திறந்து பாராட்டிய சூப்பர் படம்

பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது சக நடிகர்கள் அந்த படத்திற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிப்பது வழக்கமான ஒன்று

மீராவுக்கு ஒரு குறும்படம்: முகத்திரை கிழியுமா?

இந்த வாரம் நிகழ்ந்த டிக்டாக் டாஸ்க்கில் ஒரு சின்ன பிரச்சனையை மீரா பூதாகரமாக கிளப்ப, அதனால் ஒட்டுமொத்த போட்டியாளர்களை அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யும்

உலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி!

Joining Parachute Regiment of Territorial Army for next 2 months: MS Dhoni tells BCCI

அனுஷ்காவின் அடுத்த படத்தின் ஆச்சரிய அறிவிப்பு

பாகுபலி, பாகுபலி 2 ஆகிய இரண்டு பிரமாண்டமான வெற்றி படங்களை அடுத்து நடிகை அனுஷ்கா கடந்த ஆண்டு பாகிமதி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார்.