மூவர் கூட்டணியில் திடீர் விரிசல்: கஸ்தூரி-வனிதா மோதல்

கவின் தலைமையிலான ஐவர் கூட்டணிக்கும் வனிதா தலைமையிலான மூவர் கூட்டணிக்கும் இடையே பிக்பாஸ் வீட்டில் பனிப்போர் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. எந்த கூட்டணியை எப்படி கவிழ்க்கலாம், எப்படி உடைக்கலாம் என இருதரப்பும் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று வனிதா, கஸ்தூரி மற்றும் சேரன் ஆகிய மூவரும் கவின் கூட்டணியின் முதுகெலும்பை உடைப்பது குறித்து திட்டம் தீட்டி வந்த நிலையில் இன்று அந்த மூவர் கூட்டணியிலேயே திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது.

வனிதாவை கஸ்தூரி 'குண்டு' என்று கூறி கேலி செய்ததாக தெரிகிறது. இதனையறிந்த வனிதா, கஸ்தூரியை வெளுத்து வாங்குகிறார். தான் மூன்று குழந்தைகளுக்கு அம்மா என்றும் தன்னுடைய மூத்த பையனுக்கு 18 வயது ஆகிறது என்றும் ஆனால் தான் பார்க்க அப்படியா இருக்கின்றது என்று கூறி, தன்னை எப்படி கஸ்தூரி கேலி செய்யலாம் என்று வெளுத்து வாங்க, அவரை சமாளிக்க முடியாமல் கஸ்தூரி தடுமாறுகிறார். 

வனிதா-கஸ்தூரி சண்டையில் ஐவர் கூட்டணியினர் தலையிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

டிக்டாக் வீடியோவுக்கு அடிமையாகி உயிரை இழந்த சிறுவன்!

டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்து லைக்ஸ்களை குவிக்க பலர் ரிஸ்க் எடுப்பது தெரிந்ததே. அந்த வகையில் சிலசமயம் உயிரையும் இழக்கும் அபாயமும் ஏற்படும்.

அமீர்கான் படத்தின் விஜய்சேதுபதியின் கேரக்டர் இதுதான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்கும் படம் ஒன்றில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

வனிதாவா? வாத்தா? கஸ்தூரி டீச்சருக்கு எதிராக ஹவுஸ்மேட்ஸ் மாணவர்கள்

பிக்பாஸ் வீட்டில் இன்று பள்ளி டாஸ்க் நடைபெற்று வருகிறது. சேரன், கஸ்தூரி ஆசிரியர்களாகவும், மற்ற ஹவுஸ்மேட்ஸ் மாணவ, மாணவிகளாகவும் நடித்து வருகின்றனர்.

நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்த சந்திராயன் 2: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் - 2 செயற்கைக்கொள் அடுத்த 16 நிமிடங்களில் பூமியின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதையடுத்து பூமியை சுற்றி வரும் வட்டப்பாதையும்

ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி!

வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதன் மூலம் அதிக மோசடி நடந்து வருவதால்