சாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா?

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு பிறந்து நாள் என்றும் பாராமல் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பி கடந்த இரண்டு நாட்களாக நடந்த மீட்டிங் பிரச்சனைக்கு காரணம் சாக்சிதான் என்பதை பிக்பாஸ் வெளிப்படுத்தினார். குறும்படத்திற்கு முன்னர் வரை சாக்சி பொய் சொல்ல மாட்டார், மீரா மீது தான் தவறு இருக்கும் என அனைவரும் கணித்திருந்த நிலையில் சாக்சியின் பொய்வேடம் குறும்படத்திற்கு பின்னர் வெளுத்துவிட்டது.

இந்த நிலையில் இன்றைய புரமோவிலும் கவின் குறித்து சாக்சி கூறிய ஒரு விஷயத்தை கமல் வெளிப்படுத்துகிறார். இதனால் சாக்சியின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தெரிய தொடங்குகிறது. 'அவன் எவிக்சன் டைம்ல கிளாப் வாங்கிறதுக்காக டிராக் மாறிட்டான்' என்று சாக்சி கூறியதை கமல் குத்திக்காட்டுவதால் சாக்சியின் முகம் வெளிர்கிறது. இதனையடுத்தாவது சாக்சியின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு கவின் சுதாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

அதேபோல் 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று சேரனை யாரோ கூறியுள்ளனர். அது யார் என்பதும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். மொத்தத்தில் பிக்பாஸ் நேற்றும் இன்றும் நன்றாக கொளுத்தி போடுவதால் அடுத்த வாரம் ரணகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அழுகும் அபிராமி, சலிப்பில் மோகன், டென்ஷனில் மீரா - சேரன்: வெளியேறுவது யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை அறிவிப்பது குறித்த புரமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. வழக்கம்போல்

'பிக்பாஸ்' வனிதா உடைமாற்ற விஜய் செய்த உதவி!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய வனிதா விஜய்குமார், பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரமே வெளியே வருவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இயக்குனர் சங்க தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு தொடங்கியது

புதிய கல்விக் கொள்கை: விஜய் தரப்பில் இருந்து சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு

நடிகர் சூர்யா சமீபத்தில் தெரிவித்த புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,

'இந்தியன் 2' படத்தில் இணைகிறாரா சூர்யா-கார்த்தி நாயகி?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைக்காவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'.