close
Choose your channels

சாக்சியை வச்சு செய்யும் பிக்பாஸ்: கவின் தப்பிப்பாரா?

Sunday, July 21, 2019 • தமிழ் Comments

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு பிறந்து நாள் என்றும் பாராமல் ஒரு குறும்படத்தை ஒளிபரப்பி கடந்த இரண்டு நாட்களாக நடந்த மீட்டிங் பிரச்சனைக்கு காரணம் சாக்சிதான் என்பதை பிக்பாஸ் வெளிப்படுத்தினார். குறும்படத்திற்கு முன்னர் வரை சாக்சி பொய் சொல்ல மாட்டார், மீரா மீது தான் தவறு இருக்கும் என அனைவரும் கணித்திருந்த நிலையில் சாக்சியின் பொய்வேடம் குறும்படத்திற்கு பின்னர் வெளுத்துவிட்டது.

இந்த நிலையில் இன்றைய புரமோவிலும் கவின் குறித்து சாக்சி கூறிய ஒரு விஷயத்தை கமல் வெளிப்படுத்துகிறார். இதனால் சாக்சியின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தெரிய தொடங்குகிறது. 'அவன் எவிக்சன் டைம்ல கிளாப் வாங்கிறதுக்காக டிராக் மாறிட்டான்' என்று சாக்சி கூறியதை கமல் குத்திக்காட்டுவதால் சாக்சியின் முகம் வெளிர்கிறது. இதனையடுத்தாவது சாக்சியின் உண்மை முகத்தை புரிந்து கொண்டு கவின் சுதாரிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

அதேபோல் 'சாத்தான் வேதம் ஓதுகிறது' என்று சேரனை யாரோ கூறியுள்ளனர். அது யார் என்பதும் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும். மொத்தத்தில் பிக்பாஸ் நேற்றும் இன்றும் நன்றாக கொளுத்தி போடுவதால் அடுத்த வாரம் ரணகளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz