என்னோட கான்செப்ட் இதுதான்: கால்சென்டர் டாஸ்க் குறித்து பாலாஜி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய கால்சென்டர் டாஸ்கில் ஆரி மற்றும் பாலாஜி போன் மூலம் உரையாடும் முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம். பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் ஆரி என்ற கேள்வியையும் எழுப்பி இருந்தோம்

இந்த நிலையில் இன்றைய 2-வது புரமோவில் பாலாவின் தந்திரத்தை புரிந்து கொண்டதாக சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி விளக்குகிறார். கால்சென்டர் டாஸ்க் என்றால் காலர் கேள்வி கேட்கவேண்டும், கால் சென்டர் ஊழியர் பதிலளிக்க வேண்டும். ஆனால் பாலாஜி கேள்வி எதையுமே முன்வைக்கவில்லை. என்னைப்பற்றிய நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே எடுத்து வைத்தார். இதன் மூலம் தன்னுடைய கருத்து மட்டும் வெளியே தெரிய வேண்டும், அதுவும் எனக்கு எதிராக அந்த கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதுதான் பாலாஜியின் நோக்கம் என்று சனம் மற்றும் ஆஜித்திடம் ஆரி கூறினார்

இந்த நிலையில் அர்ச்சனா மற்றும் நிஷாவிடம் இது குறித்து கூறிய பாலாஜி, ‘ஆடியன்ஸ்களுக்கு எனக்கும் அவருக்கும் இடையே என்ன சண்டை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக நான் இந்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டேன் என்றும் என்னுடைய கான்செப்ட் இது ஒன்றுதான் என்றும் பாலாஜி கூறுகிறார்

மொத்தத்தில் வழக்கமாக டாஸ்க்கில் இருந்து திசை திரும்பும் பாலாஜி இந்த டாஸ்க்கில் காலராக கேள்வி கேட்காமல் ஆரி பழி சுமத்த டாஸ்க்கை பயன்படுத்திக் கொண்டாரோ என்ற எண்ணம் தற்போது பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது. இருப்பினும் இன்றைய முழு எபிசோடை பார்த்தால்தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்

More News

பலமுறை கேலி செய்த அர்ச்சனாவை ஒரே மீம்ஸில் பங்கம் செய்த சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக அர்ச்சனா நுழைந்த முதல் நாளில் ஒவ்வொருவரைப் பற்றி கருத்துக் கூறிய போது சுரேஷை மட்டும் அவர் படுத்திருந்த விதம் குறித்து கேலி செய்து சிரித்தார்

நடிகர் சிவகுமாருக்கு கொரோனாவா? பதில் சொல்லும் புகைப்படம்!

பழம்பெரும் நடிகரும் நடிகர்கள் சூர்யா கார்த்தியின் தந்தையுமான சிவகுமாருக்கு கொரனோ தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும்

அமெரிக்காவில் ஒரு ஐபிஎல் தொடர்: மிகப்பெரிய தொகையை முதலீடு செய்யும் பிரபல நடிகர்!

இந்தியாவில் ஐபிஎல் போட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் ஒரு திருவிழா போல் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் கோடிக்கணக்கான பணம் இதில் வருவாய் கிடைக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினி என்னை அணுகினால் 70% வெற்றி கிடைக்கும்: சாமியார் ஆரூடம்!

ரஜினி என்ன அணுகி அரசியலில் குதித்தால் அவருக்கு எழுபது சதவீத வெற்றி சாத்தியம் உண்டு என சாமியார் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கால் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.