பிக்பாஸ் வீட்டில் கேப்டனாகிவிட்டாரே இவர்: ஆட்டம் அதிகமாகுமோ?

பிக்பாஸ் வீட்டில் தனக்கென ஒரு குரூப் வைத்துக்கொண்டு ஒரு சிலரின் ஆதரவால் வீட்டில் உள்ள மற்றவர்களை ஆதிக்கம் செய்து வருவதாக அர்ச்சனா மீது ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டை நெட்டிசன்கள் பார்வையாளர்களும் வைத்துள்ளனர். கமல்ஹாசன் கூட அவ்வப்போது குரூப்பிஸம் என்ற வார்த்தைகளை அர்ச்சனாவிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்று விட்டதால் அவர் அடுத்த வார கேப்டன் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கேப்டன் டாஸ்க்கில் பாலாஜி, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மூவருமே வெறித்தனமாக விளையாடினாலும் டாஸ்க்கை அர்ச்சனா தான் முதலில் முடித்து வெற்றி பெறறார். இதனை அடுத்து அவர் அடுத்த கேப்டனாக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் அர்ச்சனா, கேப்டன் ஆகி விட்டால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதற்கு முன்னர் அர்ச்சனா கேப்டனாக இருக்கும் போது அவரது ஆதிக்கம் தூள் பறந்தது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனா இந்த வாரம் நாமினேஷனில் உள்ளார் என்பதும் அவர் ஒருவேளை அவர் வெளியேறி விட்டால் கேப்டனாக வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

திட்டமிட்ட நிகழ்ச்சியை திடீரென ரத்து செய்த நடிகை: சித்ரா ரசிகர்கள் காரணமா?

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ரா குறித்து நேரலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்த நடிகை ஒருவர் அந்த நிகழ்ச்சியைத் ரத்து செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிக்பாஸ் பார்த்தால் குடும்பம் உருப்படாது: முதல்வர் பழனிசாமி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமலஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்

'அந்தாதூன்' ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகர்! இசையமைப்பாளரும் அறிவிப்பு!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் ரீமேக் செய்ய பிரபல தயாரிப்பாளரும் நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் திட்டமிட்டிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

அமேசான் நிறுவனத்தால் மாஸ் நடிகர்களுக்கு ஆபத்தா? எச்சரிக்கும் திரையரங்குகள் சங்க தலைவர்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் 8 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதித்தது.

ரூ.26 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டங்கள்… தமிழகத்தை சீர்ப்படுத்தும் எடப்பாடியார்!!!

அரியலூர் மாவட்டத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வளர்ச்சித் திட்டப் பணிகளைக் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.