பிக்பாஸ் கேட்ட கேள்வியும் சமயோசிதமாக கமல் அளித்த பதிலும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன் தோன்றும் நாட்கள் என்பதால் மற்ற நாட்களை விட கூடுதல் சுவராஸ்யமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இன்று கமல் தோன்றும் நாள் மட்டுமின்று இன்று அவருடைய 66-வது பிறந்த நாள் என்பதால் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரோமோவில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பிக்பாஸ் தெரிவிக்கின்றார். அதற்கு நன்றி கூறிய கமல்ஹாசனிடம் ’ட்ரீட் எங்கே? என்று பிக்பாஸ் கேட்டபோது கமல்ஹாசன் அவர்கள், ‘நான் அனைவரையும் மரியாதையாகவும் சமமாகவும் நடத்த வேண்டும் என்றும் அதைத் தொடர்ந்து செய்வேன் என்றும் கூறும் உறுதிமொழியே அனைவருக்கும் கொடுக்கும் ட்ரீட்’ என்று கூறினார்.

இதனை அடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக எழுந்து கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறுகின்றனர். அவர்களுக்கு கமல்ஹாசன் தனது நன்றி தெரிவிப்பதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிஜமாவே பெண்கள் முறத்தால் புலியை விரட்டி இருப்பாங்களோ??? பழமொழியை நிரூபிக்கும் புது கண்டுபிடிப்பு!!!

வீரம் என்ற வார்த்தைக்கு பெரும்பாலும் ஆண்களையே கைக் காட்டுகிறோம். 21 ஆம் நூற்றாண்டில் இந்த கணிப்பு தவறு எனப்பல நேரங்களில் சொல்லப்பட்டாலும்

சுரேஷ் வெளியேற்றம், எஸ்பிபி வீடியோ: இன்றைய செண்டிமெண்ட் எபிசோட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் கமல்ஹாசனுக்கு போட்டியாளர்களின் பஞ்சாயத்தை தீர்க்கவே நேரம் சரியாக இருக்கும்.

'மங்காத்தா' பட நடிகையின் தந்தை மரணம்: திரையுலகினர் இரங்கல்!

அஜித் நடித்த 'மங்காத்தா' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை லட்சுமிராயின் தந்தை ராம்ராய் என்பவர் காலமானார். இதனையடுத்து தனது தந்தையார்

காஜல் அகர்வாலின் ஹனுமூன் எங்கே? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கணவருக்காக 'கர்வா செளத்' என்ற விரதத்தையும் மேற்கொண்டார்

ஐ.நா. ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற இந்திய பெண்மணி… உலக அளவில் முக்கியத்துவம் பெறும் இந்தியா!

நா பொதுச்சபையின் நிர்வாகம் மற்றம் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளரான விதிஷா மைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.