close
Choose your channels

காஜல் அகர்வாலின் ஹனுமூன் எங்கே? வைரலாகும் இன்ஸ்டா புகைப்படங்கள்!

Saturday, November 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கணவருக்காக ’கர்வா செளத்’ என்ற விரதத்தையும் மேற்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

இந்த நிலையில் சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதால் காஜல் அகர்வால் தனது ஹனிமூனை ஒத்திவைத்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அது வதந்தி என்றும் காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்குச் சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’தேனிலவுக்கு செல்வதற்காக தயாராகிவிட்டோம்’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் காஜல், கவுதம் ஆகிய இருவருடைய பாஸ்போர்ட் மற்றும் லக்கேஜ் பேக்கிங் செய்யப்பட்ட புகைப்படங்களும் இன்ஸ்டா ஸ்டோர்யில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் காஜல் அகர்வால் தனது கணவருடன் எந்த நாட்டிற்கு ஹனிமூன் சென்றார் என்பது ரகசியமாக உள்ளது. இதனை அடுத்து ஹனிமூன் கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.