செக்மேட் ஃபார் அர்ச்சனா: ஆரி, பாலாஜியால் உடைகிறதா அன்பு குரூப்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க்கில் மூன்று இடங்கள் பெற்றவர்கள் தங்களை நாமினேஷன் இருந்து காப்பாற்றிக் கொண்டு இன்னொருவரை நாமினேட் செய்யலாம் என்று பிக்பாஸ் அறிவித்திருந்தார்

இதனை அடுத்து முதலிடத்தை பெற்ற ஆரி தன்னை காப்பாற்றிக் கொண்டு தனக்கு பதிலாக ஜித்தன் ரமேஷை நாமினேட் செய்தார். அதன் பிறகு இரண்டாவதாக வந்த பாலாஜி கேப்ரில்லாவை நாமினேட் செய்தார். சனம்ஷெட்டிக்கு பதிலாக வந்த அர்ச்சனாவுக்கு சோம், ஆஜித் மற்றும் ரியோ ஆகிய மூவரில் ஒருவரை மட்டுமே நாமினேட் செய்ய வேண்டிய நிலை இருந்தது

தன்னுடைய குரூப்பில் உள்ளவர்களையே நாமினேட் செய்ய வேண்டிய நிலை அர்ச்சனாவுக்கு முதல்முறையாக ஏற்பட்டது. அர்ச்சனா ஒரு நிமிடம் தயங்கி நீண்ட யோசனைக்குப் பிறகு சோம்சேகரை நாமினேட் செய்தார்

நாமினேட் செய்து விட்டு வெளியே வந்த அர்ச்சனாவை ’உங்களுக்கு ரொம்ப சிக்கலாக இருந்திருக்குமே, எங்கே குத்த வேண்டும் என்று ரொம்ப யோசித்து இருப்பீர்களே’ என பாலாஜி கலாய்த்தார். பாலாஜியின் கலாய்ப்பு முதலில் அர்ச்சனாவுக்கு புரியவில்லை என்றாலும் நாமினேஷன் பிராசஸ் முடிந்த பின்னர் யார் யார் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் என்பதை பிக் பாஸ் அறிவித்த பின்னர் பாலாஜி சொன்னதை புரிந்து கொண்ட அர்ச்சனா, பாலாஜியிடம் இது குறித்து பேசுகிறார்

60 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் உள்ள நால்வர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இந்த வாரம், ரம்யா, ஷிவானி, கேபி, சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா என ஆறு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் ரம்யா, ஷிவானி ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டால், அன்பு குரூப் உடைவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சோம் வெளியேறினால், தன்னால் தான் சோம் வெளியேறியதாக அர்ச்சனா குரூப் சோகமாவது உறுதி. இருப்பினும் மக்கள் தீர்ப்பு என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

சந்தானம் அடுத்த படத்தின் கலர்புல் லுக்: இணையத்தில் வைரல்!

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியான 'ஏ1' திரைப்படம் வெற்றியைப் பெற்றதை அடுத்து மீண்டும் அதே டீம் இணைந்த படத்தின் டைட்டில்  'பாரீஸ் ஜெயராஜ்'என்று வைக்கப்பட்டது

கடலில் அலைச்சறுக்கு விளையாட்டு: மகளை காப்பாற்ற சென்ற தந்தை பரிதாப பலி!

ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மகளை காப்பாற்ற சென்ற தந்தை பலியான சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

பாலாஜி டீம் செய்த டார்ச்சர், அர்ச்சனா கண்ணில் கண்ணீர்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க், 'புதிய மனிதா'. மனிதர்கள் மற்றும் ரோபோ என இரு பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிந்து கொள்கின்றனர்.

கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் விஜய்சேதுபதி பட இயக்குனரின் அடுத்த படம்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்தவர் பாலாஜி தரணிதரன்

ஓடிடியில் வெளியாகிறதா விஜய் சேதுபதியின் அடுத்த படம்?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்தப் படத்திற்கு விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும்