close
Choose your channels

சந்தானம் அடுத்த படத்தின் கலர்புல் லுக்: இணையத்தில் வைரல்!

Tuesday, December 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடிப்பில் ஜான்சன் இயக்கத்தில் வெளியான ’ஏ1’ திரைப்படம் வெற்றியைப் பெற்றதை அடுத்து மீண்டும் அதே டீம் இணைந்த படத்தின் டைட்டில் ’பாரீஸ் ஜெயராஜ்’என்று வைக்கப்பட்டது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சற்றுமுன் ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தின் இரண்டாம் லுக் வெளியாகியுள்ளது. கலர்புல்லாக சந்தானத்தின் இந்த லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

’ஏ1’ இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்குசந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில், துரைராஜ் கலை இயக்கத்தில், பிரகாஷ் மாபு படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிது வருகிறது. மேலும் இந்த செகண்ட்லுக்கில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.